இந்தியன் வங்கி தனிநபர் மற்றும் தொழிற் கடன் வழங்கும் முகாம்
காஞ்சிபுரம் :
இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் தனிநபர் மற்றும் தொழிற் கடன் வழங்கும் முகாம் பெரிய காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் திரு.கே. சந்தோஷ் குமார், காஞ்சிபுரம் கிளை மேலாளர் வரவேற்புரை வழங்கினார். மண்டல மேலாளர் திரு ஏ. ராஜாராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இம்முகம் காஞ்சிபுரம் மண்டலத்தில் மூன்று இடத்தில் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அனகாபுதூர்) நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி, சின்ன காஞ்சிபுரம், பூக்கடை சத்திரம், காஞ்சிபுரம் மெயின் கிளை மற்றும் எம். எம்.சி கிளை வாடிக்கையாளர்களுக்கு கிளை மேலாளர்கள் கலந்து கொண்டு கடன்கள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் திரு.ஹிமாயூன் கபீர் (முதன்மை மேலாளர்) திரு கௌதம் (முதன்மை மேலாளர்) திருமதி விஜயலட்சுமி (முதன்மை மேலாளர்) திரு. சரவணன் பாண்டியன் (முதன்மை மேலாளர்) கலந்து கொண்டனர். இறுதியாக திரு வி. சங்கர் துணை மண்டல மேலாளர் கலந்து கொண்டு நன்றியுரை வழங்கினார். முகாமில் தனிநபர் ரூ 20 கோடி மற்றும் தொழிற் கடன் ரூ 20 கோடி வழங்கப்பட்டது.


No comments
Thank you for your comments