ஆவணங்கள் மற்றும் நில அபகரிப்பு வழக்கில் மூவர் கைது
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக ஆவடி காவல் ஆணையரகம் சிசிபியில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில், கேஆர்வி என்று அழைக்கப்படும் மிளகப்பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு எப்ஐஆரில் போலி ஆவணங்கள் தயாரித்து, 18 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, கே.ஆர்.வெங்கடேசன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
A1 இலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளும் A2 ல் இருந்து ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன. கே.ஆர்.வெங்கடேசன் மீது ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 40க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அரசியல் செல்வாக்கு, பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு காவல்துறையின் கைகளில் சட்டப்பூர்வமான பாடம் புகட்டப்படும் என்று ஆவடி காவல் ஆணையாளர் தெரிவித்தார்


No comments
Thank you for your comments