Breaking News

கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் வளத்தோட்டம் ஊராட்சியில் தமிழ்நாடு முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் மூலம் 75-லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை ஒன்றிய பெருந்தலைவர் மலர்க்கொடிகுமார் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  க.சுந்தர் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ஜி.செல்வம் அவர்களும் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை தலைவர் திவ்யா இளமது, ஒன்றிய கழக செயலாளர் குமணன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






No comments

Thank you for your comments