முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு 15,000 மரக்கன்றுகள் நடும் விழா
மாண்புமிகு முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்கதிர்பூர் கைத்தறி பட்டு பூங்கா அருகில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 15,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகள் நட்டு விழாவினை துவக்கி வைத்தார்கள்.
மாண்புமிகு முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. அதன் தொடர் நிகழ்வாக இன்று (09.06.2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்கதிர்பூர் கைத்தறி பட்டு பூங்கா அருகில் மாநில நெடுஞ்சாலையில் துறை சார்பில், 15,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (07.06.2023) அன்று நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த தலைமைப்பொறியாளர் அலுவலக வளாகத்தில், மாண்புமிகு முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுப்பாடி, இலுப்பை, வடஇலுப்பை, பெரும்பாக்கம், விஷார், காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையில் பட்டு பூங்கா ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்வின்போதுகாஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலர் குமார், கோட்டப்பொறியாளர், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.




No comments
Thank you for your comments