Breaking News

உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்க நிகழ்ச்சி  நடைப்பெற்றது. கோட்டாட்சியர் கனிமொழி தலைமை தாங்கினார். 


ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன்,  உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்  ஞானசேகரன் பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார், நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உத்திரமேரூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். 

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.  

திருப்புலிவனம், மருதம், ஒழுகரை, புலிவாய், கருவேப்பம்பூண்டி, வெங்காரம், புத்தளி, சிலாம்பாக்கம், சிறுகளத்தூர், நரியம்பாக்கம், நரியம்புதூர், கன்னிக்குளம், கடம்பரக்கோவில், வெங்கச்சேரி, கடல்மங்கல்ம், மருத்துவான்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள 20 திற்கும் மேற்பட்ட கிராம மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, ரேஷன் கார்டு, புதிய பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்டவைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் அனைத்தும் சம்மந்தபட்ட துறைக்கு பரிசீலனைக்காக அனுப்பபட்டது. நிகழ்ச்சியில்  கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட அரசுதுறை அலுவலர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments