Breaking News

தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு - ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடலாம்..

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                                                                                                                                                                      2022-2023ஆம்  ஆண்டு மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்கள்.   

இத்திட்டத்தில் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் உறைவிப்பான் (FREEZER) குளிர்விப்பான் (CHILLER) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 இலட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனிநபர்களுக்கு திட்டத்தொகையில்  50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியம் அளிக்கப்படும்.  

இத்திட்டத்தில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.    

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments