திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆய்வு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் தேவையான வசதிகள் குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (30.04.2023) தலைமைச் செயலர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க (TIEMA) உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் சங்க உறுப்பினர்களிடம் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் தேவையான வசதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அதை தொடர்ந்து திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழில்முனைவோர் கூட்டமைப்பினர்களுடன் இணைந்து ரூ.47.62 கோடி திட்ட மதிப்பில் ரூ.33.33 கோடி தமிழ்நாடு அரசின் மானியத்துடன் தொடங்க உள்ள துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் (NEEDS) கீழ் ரூ.75.00 இலட்சம் மானியத்துடன் ரூ.330.00 இலட்சம் திட்ட மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள தி/ள். இன்போக்கஸ் எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ரூ.10.50 இலட்சம் மானியத்துடன் ரூ.34.00 இலட்சம் திட்ட தொகையுடன் பட்டியலின வகுப்பை சார்ந்த நபருக்கு கடனுதவி வழங்கப்பட்ட தி/ள். தியாகராஜா மிஷினிங் ஒர்க்ஸ் நிறுவனத்தையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறை செயலர் திரு.வி.அருண்ராய், இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் திருமதி எஸ் மதுமதி இ.ஆ.ப., குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறையின் கூடுதல் இயக்குநர் திரு. ஏகாம்பரம், காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய, பொது மேலாளர், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளர் மற்றும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments