Breaking News

புதிய அமைச்சரவை... தமிழக நிதி அமைச்சரானார் தங்கம் தென்னரசு

சென்னை: 

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்து தொழில்துறை புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் துறைகள் மாற்றம் ஏன்?
 முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

அமைச்சர் மனோ தங்கராஜு-க்கு பால் வளத்துறை அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சாமி நாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments