Breaking News

முத்தீஸ்வரர் ஆலயத்தில் திருக்குறிப்பு தொண்டர் நாயனாரின் 61 ஆம் ஆண்டு குருபூஜை விழா

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள  முத்தீஸ்வரர் ஆலயத்தில் திருக்குறிப்பு தொண்டர் நாயனாரின் 61 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. 

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் திருக்குறிப்பு தொண்டர் நாயனாரின்  61 ஆம் ஆண்டு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. 


இதில் ஸ்ரீ சத்குரு சிவசாமி அவர்கள் அருளாலும் மகான் யோகேஸ்வரர் மௌன சிவானந்த சுவாமி அருளாலும் காஞ்சி மகா பெரியவர் ஆசியாலும் சுப்ரமணிய சுவாமிகள் அருளாலும் 61 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை ஒட்டி  நாயனாருக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது 

இதனைத் தொடர்ந்து சிறப்பு தூப தீப ஆராதனை நடைபெற்று ஜடாரியுடன் மரியாதையும் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிவபெருமானும் பார்வதியும் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இவ்விழாவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது

No comments

Thank you for your comments