Breaking News

ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டாடா டெக்னாலஜி 4.0 மையம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அரசினர் 0தொழிற்பயிற்சி நிலையத்தில், டாடா டெக்னாலஜி 4.0 மையம் ரூ.3.73 கோடி திட்ட மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடத்தையும், டாடா நிறுவனத்தால் வழங்கப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கைக்கருவிகளையும் மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழக அரசாணை எண்:14 நாள்: 09.02.2022-ன்படி, டாடா டெக்னாலஜி 4.0 மையம்  ரூ.3.73 கோடி திட்ட மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடத்தையும், டாடா நிறுவனத்தால் வழங்கப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கைக்கருவிகளையும் இன்று (19.05.2023) மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு கட்டட பணிகள், இயந்திரங்களின் தன்மை குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர்  திரு.சி.வீரராகவ்ராவ் இ.ஆ.ப.,  காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா,  துறையின் இணை இயக்குநர்கள் திரு.டி.ராஜசேகர் மற்றும் திரு.ரவிச்சந்திரன், சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குநர் திரு.ஆர்.ராஜ்குமார், டாடா டெக்னாலஜி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு  அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.



செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments