08.05.2023 அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா (PM National Apprenticeship Mela -PMNAM)
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா (PM National Apprenticeship Mela (PMNAM)) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
08.05.2023 திங்கள் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா (PM National Apprenticeship Mela (PMNAM)) மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் (Industry Clusters) கொண்டு நடத்தப்படுகின்றது.
இம்முகாமில் தகுதியுடைய ITI தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு வரை படித்த/இடைநின்ற, 10ம் வகுப்பு வரை படித்த/இடைநின்ற மற்றும் 12ம் வகுப்பு வரை படித்த/இடைநின்ற மாணவர்களுக்கும் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் NAC (National Apprenticeship Certificate) சான்றிதழ் பெற்று பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 044-29894560 என்ற தொலைபேசி எண். மூலம் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments