Breaking News

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம் - உடனே விண்ணப்பிக்கவும்

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ -சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை,  மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர்(VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.

இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.  


இந்ததிட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து,       இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in / www.tnega.tn.gov.in)  இணையவழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் “அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில்” பயன்பெற விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று காலை 11.30 மணி முதல் 14.04.2023 அன்று இரவு 20.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல்  (User ID & Password) விண்ணப்பித்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments