இந்தியா-இலங்கை வருடாந்திர இருதரப்பு கடல்சார் பயிற்சி
புதுடெல்லி:
இந்தியா-இலங்கை பத்தாவது இருதரப்பு கடல்சார் பயிற்சி கொழும்பில் ஏப்ரல் 3 முதல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
03-05 ஏப்ரல் 2023 முதல் கட்டம் ஹார்பர் பகுதி, அதைத் தொடர்ந்து 06-08 ஏப்ரல் 2023 வரை கடல் பகுதி என பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது .
இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் கில்டன், உள்நாட்டில் கட்டப்பட்ட கமோர்டா கிளாஸ் ஏஎஸ்டபிள்யூ கார்வெட், ரோந்து கப்பல் ஐஎன்எஸ் சாவித்ரி ஆகியவை இதில் கலந்து கொள்கின்றன.
இலங்கை கடற்படையின் சார்பில் கஜபாகு மற்றும் சாகர ஆகிய கப்பல்கள் பங்கேற்கின்றன. இரு தரப்பிலிருந்தும் கடல்சார் ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறப்புப் படைகளும் பயிற்சியில் பங்கேற்கும்.
இதற்கு முன்பு இந்தக் கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு மார்ச் 7 முதல் 12 வரை நடைபெற்றது.
பலதரப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும் போது, பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துதல், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றை இந்தக் கூட்டுப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் தோழமையின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த துறைமுக அளவில் தொழில்சார், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.


No comments
Thank you for your comments