Breaking News

பள்ளி செல்லா / இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி -ஒத்துழைப்பு நல்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: 

2023-24 ஆம் கல்வியாண்டில் பள்ளி  செல்லா  / இடைநின்ற  மற்றும்  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு  பணி நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  தெரிவித்துள்ளார்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். 

அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி / ஊராட்சி / பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், கணக்கெடுப்பு களப்பணி  ஏப்ரல் 2023 முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே 2023 இறுதி வாரத்திலும் நடைபெற உள்ளது. 

இக்கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. 

எனவே இக்கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள்  அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை

Mail ID - dpckanchi@yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments