களக்காட்டூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம் :
அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் வி. சோமசுந்தரம் திறந்து வைத்தார்
அதிமுக தலைமை கழக ஆணைக்கிணங்க கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவிட்டார்.
அதன் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர். வி. சோமசுந்தரம் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி ஏற்பாட்டில் களக்காட்டூர் பகுதியில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் வி சோமசுந்தரம் திறந்து வைத்து தர்பூசணி வெள்ளரிக்காய் மோர் இளநீர் குளிர்பானம் நுங்கு உள்ளிட்டவை பொது மக்களுக்கு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர். வாலாஜாபாத் பா கணேசன் காஞ்சி பன்னீர்செல்வம் ஒன்றிய அவை தலைவர் ராஜசேகர் ஒன்றிய துணைச் செயலாளர் ,குப்பு, அல்லி ,விஜயன் அல்லி ஒன்றிய கவுன்சிலர் பேபி சசிகலா மாவட்ட பிரதிநிதி சம்பத் எழிலரசி நடராஜன் ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை சேட்டு மேத்தா ஞானவேல் மற்றும் கிளைச் செயலாளர் அசோக்குமார் கிருபாகரன் உலகநாதன் வாசு லோகு எட்டி கண்ணன் சத்தியமூர்த்தி பார்த்தசாரதி முனிசாமி சந்திரன்,ஐடி விங் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமான கலந்து கொண்டனர்

No comments
Thank you for your comments