காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண வைபவம்-ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
63 நாயன்மார்களுள் ஒருவரான திருக்குறிப்புத்தொண்டநாயனார் முக்தி பெற்ற ஸ்தலமான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு மூலவர் முத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, உற்சவர் சந்திரசேகரர் சிவ பெருமானுக்கும் மனோன்மணி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மல்லிகைப்பூ, ரோஜா பூ, மனோரஞ்சிதப்பூ, மாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் மணமக்களாக மாற்றி கோவில் மண்டபத்தில் எழுந்தருளினர்.
பின்னர் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, கோவில் அர்ச்சகர்கள் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய,மனோன்மணி அம்மையாருக்கும் சந்திரசேகரர் சிவபெருமானுக்கும் மாலை மாற்றி அணிவித்து கொண்டு, மாங்கல்யத்தை கட்டும் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நிர்வாக குழு தலைவர் சரவணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்
இத்திருமண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பார்த்து,சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது



No comments
Thank you for your comments