Breaking News

காஞ்சிபுரம் சக்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், ஏப்.23 : 

காஞ்சிபுரம் வேளிக்கைப்பட்டரைத் தெருவில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் வேளிக்கைப்பட்டரைத் தெருவில் அமைந்துள்ளது சக்தி விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இம்மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 

இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை சக்தி விநாயகர் கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கர பாண்டியன்,காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மாலையில் ஆலய வளாகத்தில் வள்ளி,தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் இதனையடுத்து சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவின் தலைவரும்,பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான ஏ.மணி,செயலாளர் எஸ்.முனியப்பன் தலைமையிலான விழாக்குழுவினரும்,வேளிக்கைப் பட்டரை தெரு பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments