Breaking News

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக அறப்போராட்டம்

வேலூர் :

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எம்.பி பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்ததாக கூறி மோடி அதானியை கண்டித்து காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜார்ஜ் தலைமையில் வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் சத்யாகிரக அறப்போராட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த அறப்போராட்டத்தில் காட்பாடி வடக்கு ஒன்றிய தலைவர் கணேஷ், கே.எஸ். ரவி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரசன்னா குமார் ஓ.பி.சி வேலூர் மாவட்ட தலைவர் நோபல் லிவிங்ஸ்டன் 1-வது மண்டல தலைவர் பாலகுமார், 2-வது மண்டல தலைவர் ஜான் பீட்டர், மாநில பொதுச் செயலாளர் எஸ்.சி எஸ்.டி பிரிவு எஸ்.சித்திரஞ்சன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments