எஸ்பி டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் "சமத்துவ நாள்" உறுதி மொழி ஏற்பு
இன்று (13.04.2023) காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் இணைந்து "சமத்துவ நாள்" உறுதி மொழியை பின்வருமாறு ஏற்றுக்கொண்டனர்.
"சமத்துவ நாள்" உறுதிமொழி
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,
சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு
எதிராகவும்,
தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,
ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,
வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,
எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,
நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,
சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும்,
சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.
இவ்வாறு உறுதி மொழி ஏற்றனர்.


No comments
Thank you for your comments