ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டும் பணி
ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் மேல்செவலாம்பாடி ஊராட்சியில் உடன்பிறப்புகளாய் இணைவோம் வா என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் சாந்தி சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், மற்றும் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில் ஏராளமான திமுக கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டிலான நியாய விலை கடை கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து மேல்செவலாம்பாடி கூட்டுப் பாதையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர்,மோர் பந்தலை மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் மற்றும் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொத்தியார் அலிமஸ்தான் ஆகியோர்கள் கலந்துகொண்டு தொடக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நாராயணமூர்த்தி. ஒன்றிய துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி முருகன். மாவட்ட கவுன்சிலர் சாந்திசுப்ரமணியன், செல்வி ராமசரவணன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத். சமூக ஆர்வலர் பெருவளூர் பாபு. அவைத்தலைவர் உதயகுமார், கவுன்சிலர் செல்வி ரகுபதி,சக்திவாசன் மற்றும் கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments