வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது - 62சவரன் தங்க நகைகள் மீட்பு
காஞ்சிபுரம், மார்ச் 30:
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து அதிலிருந்த நகைகள்,பணம் ஆகியனவற்றை கொள்ளையடித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 62 சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி.இவர் அதே பகுதியில் கட்டிடப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டினைப் பூட்டி விட்டு சுற்றுலா சென்றுள்ளார்.
10 நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக அவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரில் வீட்டிலிருந்த 150 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுகாதர்,டிஎஸ்பி ஜூலியஸ் சீசர்,விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
தனிப்படையும் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியை சேர்ந்த குணசேகரன்(26) என்ற முன்னாள் பாலியல் குற்றவாளி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.முதலில் அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவரது தகவலின் பேரில் மேலும் இருவரை கைûது செய்தனர்.
விசாரணையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாஸ் என்பவரது மகன்களான ராஜன்(47), சிவவிநாயகம்(44) என்றும் அவர்கள் கொள்ளையடித்த நகைகளை திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கிணறு ஒன்றில் போட்டு வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் கிணற்றில் இறங்கி நகைகளை தேடிய போது அதில் 62 சவரன் தங்க நகைகள் ஒரு மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது.மேலும் ஒரு கிலோ கவரிங் நகைகளும் இருந்தன.இவற்றை காவல்துறையினர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இருவரும் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களையும் போலிஸார் பறிமுதல் செய்து சகோதரர்களான ராஜனையும்,சிவவிநாயகம் மற்றும் குணசேகரன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
படம்}1.குணசேகரன்(2)ராஜன்(3)சிவ விநாயகம்
No comments
Thank you for your comments