Breaking News

டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கல்வியில் வாய்ப்புகளும் சவால்களும் கருத்தரங்கம்

கோவை, டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில், தேசியக் கல்விக் கொள்கை 2020: ஆசிரியர் கல்வியில் வாய்ப்புகளும் சவால்களும் என்ற பொருண்மையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு 02/02/2023 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.   


இக்கருத்தரங்கிற்கு கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்லா. ஜி. பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக கல்லூரி செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி, வாழ்த்துரை வழங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். 

கல்லூரி முதல்வர் முனைவர் கா.ரா. ராமசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இக்கருத்தரங்கில் மைசூரு, மண்டல கல்வியியல் நிறுவனத்தின் கல்வியியல் துறை பேராசிரியர் முனைவர் கல்பனா வேணுகோபால் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அதில் தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தற்கால நடைமுறைக்கு ஏற்ப ஆசிரியர் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி விளக்கினார். 

இக்கருத்தரங்கில் திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை மேனாள் பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுதிர், கோவை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் உயர்கல்வி நிறுவனத்தின் கல்வியியல் துறை புல முதன்மையர் பேராசிரியர் ஜி. விக்டோரியா நவோமி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார். 

இறுதியாக டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். புவனேஸ்வரி அவர்கள் கருத்தரங்க அறிக்கை வாசித்தார். இறுதியாக நாட்டுப்பண் ணுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது. 

இக்கருத்தரங்கில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் ந. பழனிசாமி, தொழில் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் திருமதி மதுரா வி. பழனிசாமி, முதன்மை செயல் அலுவலர் முனைவர் O.T. புவனேஸ்வரன், முதுநிலை நிர்வாக அலுவலர் முனைவர் எம். நடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மிகுதியாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments