Breaking News

அரசு திரு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகளை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம் அரசு திரு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புவழிகாட்டி மையத்தின் சார்பில் மாணவ மாணவிகளை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு திரு கொளஞ்சியப்பர் கலை கல்லூரியில்பயிற்சி மற்றும்வேலைவாய்ப்பு வழிகாட்டி மையத்தின் சார்பில்மாணவ மாணவிகளை தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்க தமிழக அரசின் கல்வி சார்புதுமை மற்றும்தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய தொழில் முனைவோருக்கானவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் அரசு திரு கொளஞ்சியப்பர் கலை கல்லூரியின்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டிமைய அலுவலர்பேராசிரியர் பரமசிவம் வரவேற்பு உரையாற்றினார்,கல்லூரியின் முதல்வர் ராஜவேல் தலைமை உரையாற்றினார்,

அண்ணாமலை பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்கல்லூரி மாணவ மாணவிகள் இடையே தொழில் முனைவது குறித்தும் தொழிலில் வெற்றி அடையநுண்ணறிவை பயன்படுத்துவது குறித்தும் தமிழக அரசும் ,மத்திய அரசும் மாணவ மாணவிகளுக்காக ஏற்படுத்தியுள்ள தொழில் முனையும் பல்வேறு திட்டங்கள் குறித்தும்,எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் 

விழிப்புணர்வு முகாமில் இணை பயிற்சிமற்றும் வேலை வாய்ப்புவழிகாட்டி மைய அலுவலர்முருகன் நன்றி கூறினார்

இந்தவிழிப்புணர்வு முகாமில் அனைத்து துறைகளை சேர்ந்தபேராசிரியர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments