தொடரும் அவல நிலை - சென்னையில் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி!
சென்னையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காரப்பாக்கத்தில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார்(வயது 47) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது விஷவாயு தாக்கியதில் அவர் பலியானார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்ணகி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் உரையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளின் இனி 100 சதவிகிதம் இயந்திரம் மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஒரே வாரத்தில் கழிவு தொட்டியில் ஒருவர் பலியான அவலம் நடந்துள்ளது.
No comments
Thank you for your comments