சிந்து சீனுவின் “நவம் நீ தம்” நூலை வெளியிட்டார் நே.ஜ.யூ., தலைவர் டாக்டர் கா.குமார்
வேலூர், பிப்.5-
எழுத்தாளர் சிந்து சீனு எழுதிய “நவம் நீ தம்” என்ற நூலை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் எக்ஸ்கியூடிவ் எடிட்டரும், வெல்கம் பவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் கா.குமார் இன்று (05-02-2023) வெளியிட்டார்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேலூர் மாவட்டம் மைய அலுவலகம் பெல்லியப்பா கட்டடத்தில் 05-02-2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) 3:40 மணிக்கு மதியம் எழுத்தாளர் சிந்து சீனு எழுதிய “நவம் நீ தம்” என்ற நூலை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் எக்ஸ்கியூடிவ் எடிட்டரும், வெல்கம் பவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் கா.குமார் அவர்கள் வெளியிட, காட்பாடி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மூத்த வழக்கறிஞர் பேராசிரியர் வி.பாலு அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் பேராசிரியர் அமுதா மற்றும் தமிழ்நாடு மாவட்ட அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் கா.விசுவநாதன், பொருளாளர் மஸ்தான் மற்றும் வானவில் மன்றம் கருத்தாளர்களுக்கு உபகரணம் பனியன் டி-ஷர்ட் தொப்பி பேக் வழங்கி சிறப்பு செய்தனர். இவைகள், சமூக சேவையாற்ற களத்திற்கு செல்லும் பொழுது அணிந்து செல்வதற்காக இவைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேலூர் மாவட்டம் கருத்தாளர்களுக்கு வழங்கியது.
இவ்விழாவில் கருத்தாளர்கள் டார்வின், ஜெகன், சரளா, வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்புற செய்தனர்.





No comments
Thank you for your comments