Breaking News

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அளவில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் 260 பேரை மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார். 


இந்த பணிக்காக எல்.ஐ.சி., தபால் நிலைய அதிகாரிகள்-ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான பணியிட ஒதுக்கீடு கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


 

No comments

Thank you for your comments