Breaking News

21-02-2023 அன்று மின் தடை அறிவிப்பு (EB Shutdown)

ஈரோடு :

சிப்காட் 110/11 கே.வி. II துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணி வரும் 21.02.2023 செவ்வாய்க்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பெரியாண்டிபாளையம் 110/33-11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி வரும் 21.02.2023 செவ்வாய்க்கிழமையன்று செயல்படுத்தப் படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments