Breaking News

கிராமங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துங்கள்... உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு எஸ்பி வேண்டுகோள்

காஞ்சிபுரம் :

கிராமத்தின் பாதுகாப்புக்காக கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துமாறு காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான குற்றங்கள் தடுப்பு தொடர்பாக திங்கள்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.



காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தின் சார்பில் கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றங்கள் தடுப்பது தொடர்பாக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு எஸ்பி எம்.சுதாகர் தலைமை வகித்து பேசியதாவது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவற்றால் குற்றங்கள் குறைந்திருப்பதுடன் காவல்துறைக்கும் பேருதவியாக இருக்கிறது.இதே போல கிராமங்களிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முயற்சி எடுத்து முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.அவ்வாறு செய்தால் கிராமத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை பற்றிய விபரங்கள் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.முக்கியமாக தகவல் தெரிவிப்போரின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

கிராமங்களில் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படி இளைஞர்கள்,இளம்பெண்கள் இருப்பது தெரிய வந்தால் நீங்கள் இருக்கும் இடத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை.அந்த இடத்தை விட்டு போய் விடுங்கள் என்று சொல்லி அவர்களிடம் சொல்ல வேண்டும்.இல்லையேல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.கிராமத்து இளைஞர்களை தவறான பாதைக்கு போய் விடாமலிருக்க அவர்களுக்கு அவ்வப்போது அறிவுரை கூறி அவர்களை சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக மாற்றுமாறும் எஸ்பி எம்.சுதாகர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி க்கள் சந்திரசேகர்,பாலகுமார்,டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் வரவேற்றார்.நிறைவாக உதவி ஆய்வாளர் துளசி நன்றி கூறினார்.


படவிளக்கம்..}காஞ்சிபுரத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார் எஸ்பி எம்.சுதாகர்

No comments

Thank you for your comments