ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா திடீர் மரணம்- காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி
ஈரோடு:
முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வான திருமகன் ஈவேரா, ஈரோடு கே எம் சி ஹெச் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமகன் ஈவேரா திடீர் உயிரிழப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு. திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு. திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தந்தை பெரியார் பாரம்பரியத்தில், சொல்லின் செல்வர் திரு. ஈ.வெ.கி. சம்பத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோரின் அரசியல் பாதையைப் பின்பற்றி, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர்.
சமூக ஊடகத்துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை பரப்பியவர்.
46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஐயா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெரும் மனவேதனையும் அடைந்தேன். மகனை இழந்துவாடும் ஐயா ஈவிகேஎஸ் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம் என பதிவு செய்துள்ளார்.
Also Read 🔥முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
காங்கிரஸ் கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றியதோடு, அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளைச் செய்து வந்தார். வாழ வேண்டிய 46 வயதிலேயே அவர் இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, என்னுடைய துயரத்தையும், இரங்கலையும் தெரிவித்தேன். தாங்க முடியாத இந்த துக்கத்தை அவரோடும், அவரது குடும்பத்தினரோடும், காங்கிரஸ் கட்சியினரோடும் பகிர்ந்துகொண்டு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது
திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச இளங்கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு. திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். pic.twitter.com/ayiLHutXIL
— K.S.ALAGIRI (@KS_Alagiri) January 4, 2023
காங்கிரஸ் மூத்த தலைவர் ஐயா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெரும் மனவேதனையும் அடைந்தேன். (1/2) pic.twitter.com/7tugEyAjGf
— சீமான் (@SeemanOfficial) January 4, 2023
தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது.(1/2)
— Dr S RAMADOSS (@drramadoss) January 4, 2023
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவேகிச இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 4, 2023

No comments
Thank you for your comments