சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதால் விபத்து ஏற்படும் அபாயம்...
இன்று 14.01.2023, 24வது சாலை பாதுகாப்பு வார விழாவின் நான்காவது நாள் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு தினகரன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றும் சரக்கு வாகனங்கள் தணிக்கை செய்து ஓட்டுனர்களுக்கு அறிவுரை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
ஓட்டுனர்களுக்கு அறிவுரை கூறும் போது சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதால் சாலை பழுதடைந்தும் பிரேக் பிடிக்கும்போது வாகனம் உடனடியாக நிற்காமல் விபத்துக்கள் ஏற்படும் என்றும், ஒவ்வொரு வாகனத்திற்கும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பாரத்தை மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும் அறிவுரை கூறி அனுப்பினார். ஆய்வின்போது அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு சரக்கு வாகனங்களுக்கு ரூபாய் 88 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.

No comments
Thank you for your comments