Breaking News

விதையும் அவளே.. விந்தையும் அவளே..

கரப்பான் பூச்சிக்கே கலவரம் கொள்ளும் காரிகை இவளா எரியுருளை அருகில் என்றென்றும்.....


பக்கத்தில் இருந்தால் கூட பரவாயில்லை பற்ற வைத்து பாவம் அவளும் பரிசளிக்கிறாள்....

இடி மின்னலுக்கே என்னை இறுகப்பற்றிக்கொள்ளும் இவளா இடுப்பு வலியினை எதிர்கொள்கிறாள்.....

ஒரு பிறவிக்கே சலித்துக் கொள்ளும் இவளா மகப்பேறுக் காக மறுபிறவி எடுக்கிறாள்....

இதழ்களை எதிர்கொள்ள முடியாமல் இமைகளை இறுக மூடிக்கொள்ளும் இவளா இடையனை வளைத்துக் கொடுக்கிறாள்....

பாரம் சுமக்க மறுக்கும் இவளா... பத்து மாதம் சுமக்கிறாள்.... 

திரும்பிப் பார்க்க மறுக்கும் இவளா புரண்டு படுத்து நெளிகிறாள்....



கையகப்படுத்தி  வென் கையடக்கமாய்

கிடக்கிறாள்.. கையிருப்பும் அவளே

கைரேகையும் அவளே...


உயிரும் மெய்யும் ஒன்றாய் கலந்திட 

உயிர் தரித்து சுமக்கிறாள்....

பருவம் மாறி உருவம் மாறி

கர்வம் இல்லாது கடக்கிறாள் ...


கவிதை அவளே..

கதையும் அவளே..

விதையும் அவளே..

விந்தையும் அவளே..


கந்தையாய் ஆயினும்

தந்தையாக்கியவளும் அவளே...

எந்தையும் அவளே...

சிந்தையும் அவளே... 

நான் ரசித்த சித்திரம் அவளே ...

என் சத்திரம்  அவளே ...

என் சரித்திரம் அவளே...


இவண்

ஆறுகாடு குமரன்

No comments

Thank you for your comments