Breaking News

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேரணியில்  கலந்துக்கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய வாக்கு சாவடிநிலை அலுவலர்களான திரு.எல்லப்பன், திரு. ரவிகுமார், திருமதி. பாலசரஸ்வதி, திருமதி.சந்திரா, திருமதி.ரேவதி ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். மகளிர் சுய உதவி குழுக்களால் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டியினை பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர்  திருமதி.நா.மா.கனிமொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் திரு. பிரகாஷ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் திரு.இராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments