Breaking News

தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் - சென்னை மற்றும் வேலூர் மண்டல ஆலோசனை கூட்டம்.

காஞ்சிபுரம்  தனியார் விடுதியில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சென்னை மற்றும் வேலூர் மண்டல ஆலோசனை கூட்டம் சார்பதிவாளர் சங்க தலைவர் மு.மகேஷ்  தலைமையில்  நடைபெற்றன.



இந்த ஆலோசனை கூட்டத்தில் காலியாக உள்ள சார்பதிவாளர் பணியிடங்களை நிரப்புதல், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர்களை மீண்டும் பணி அமர்த்துதல், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பதிவு செய்வதை பொது மக்கள் நலன் கருதி எளிமையாக்குதல், பதிவு சட்டப்பிரிவு 77A ன் கீழ் பதிவு அலுவலர்களை மட்டும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுதல் மற்றும் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களை பணிபளுகாரணமாக நிர்வாக நலன் கருதி இரண்டு அல்லது மூன்றாக பிரித்தல் புதிய பணியிடங்கள் உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க உறுப்பினர்கள் தமிழக முதல்வர் அவர்களையும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களையும், துறைச்செயலாளர் அவர்களையும் மற்றும் பதிவுத்துறைத்தலைவர் ஆகியோரிடம் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், சார்பதிவாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments