பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்பாளர்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சந்திப்பு
திமுக 2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது வாக்குறுதியான விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை அளித்த திமுக அரசு, தற்போது நடந்து கொண்டிருப்பது பார்த்தால் மக்கள் சம்மதத்தை பெறுவதை விட சாம வேத தானம் தர்மம் செய்து எதையாவது பயன்படுத்தி நிறைவேற்றினால் போதும் என்ற அணுகுமுறையை பயன்படுத்தி நிறைவேற்றலாம் என செய்திகள் வருகிறது.
இந்த அணுகு முறையை ஏற்கக் கூடியது அல்ல இதனை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த திட்டத்தையும் இந்த அணுகுமுறையும் தமிழ்நாடு விவசாய சங்கம் ஏற்கவில்லை
பரந்தூர் புதிய விமான நிலையம் தொடர்பாக எந்தவித அரசு ஆணை வெளியிட காரணம் அதனை பயன்படுத்தி நீதிமன்றம் மூலம் தடை அமைந்து விடும் என்ற அச்சம் தமிழக அரசுக்கு உள்ளது
இயல்பான வாழ்க்கை நிலையை வாழ முடியாத அளவிற்கு போலீசாரின் ஒடுக்குமுறை ஏற்றுகொள்ள முடியாதது எனவும் சண்முகம் பேச்சு
புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் கிராம மக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் கருத்து கேட்டறிந்தார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் அமைய இருப்பதாக மத்திய அரசு அறிவித்த நிலையில்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 180-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏகனாபுரத்தில் இன்று போராட்டம் நடத்தி வரும் கிராம பொதுமக்களை தற்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.அப்போது அக்கிராம மக்கள் நீர்நிலைகள்,விவசாயம் மிகுந்த இந்த பகுதியில் மத்திய,மாநில அரசுகள் விமான நிலையம் அமைப்பது குறித்து தெரிவித்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைய இருப்பதாக இதுவரை எந்த ஒரு அரசானையும் எந்த ஒரு உத்தரவும் இல்லாமல் இருக்கும் நிலையில் தனி நாடு இருப்பது போல பொதுமக்கள் இருக்கும் பகுதி சுற்றி போலீஸார்கள் குவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ விடாமல் நெருக்கடியை ஏற்படுத்திய தமிழக அரசு ஏற்புடையதல்ல உடனடியாக சுற்றியுள்ள காவல் தடுப்புகளை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் இடம் சந்தித்து பேச உள்ளேன்,
திமுக 2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது அள்ளித 505 வாக்குறுதிகளில் 43 வது வாக்குறுதி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை அளித்த திமுக அரசு ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பது பார்த்தால் மக்களின் சம்மதத்தை பெறுவதை விட சாம வேத தானம் தர்மம் செய்து எதையாவது பயன்படுத்தி நிறைவேற்றினால் போதும் என்ற அணுகுமுறையை பயன்படுத்தி நிறைவேற்றலாம் என செய்திகள் வருகிறது. இந்த அணுகு முறையை ஏற்றுக் கூடியது அல்ல இதனை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் கோரிக்கை வைக்கிறது.
இந்த திட்டத்தையும் இந்த இந்த அணுகுமுறையும் தமிழ்நாடு விவசாய சங்கம் ஏற்கவில்லை.
பரந்தூர் புதிய விமான நிலையம் தொடர்பாக எந்தவித அரசு ஆணையும் வெளியிட காரணம் அதனை பயன்படுத்தி நீதிமன்றம் மூலம் தடை அமைந்து விடும் என்ற அச்சம் தமிழக அரசுக்கு உள்ளது.
தொடர்ந்து போராடும் கிராம மக்களுக்கு தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடத்திற்காக தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு இருக்கும் என தெரிவித்தார்.
.jpg)


No comments
Thank you for your comments