Breaking News

ஆளுநரின் விருந்தினர் மீது உரிமை மீறல் தீர்மானம்

சென்னை, ஜன.11-

ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட உரிமை மீறல் புகாரை, குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.


தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜன.11) பேசிய திமுக திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, ஆளுநர் உரையின்போது ஆளுநரின் விருந்தினர் சபை மாடத்தில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்தார் என்று தெரிவித்து, ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இது தொடர்பாக பேசிய பேரவைத் தலைவர், இதில் உரிமை மீறலுக்கான காரணம் இருப்பதால் தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.


No comments

Thank you for your comments