அரசு கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகளுக்கு காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் மரக்கன்றுகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள அண்ணா பூங்கா அருகில் மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் ஓராண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும்வண்ணம் இருந்தது இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் ஒன்றியகுழுபெருந் தலைவர் மலர்கொடி குமார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டி மரக்கன்றுகளும் மற்றும் சான்றுகளும் வழங்கினார் .
இதில் ஒன்றிய செயலாளர் பி எம் குமார், பி.எம். நீலகண்டன் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments