Breaking News

காஞ்சிபுரம் தொண்டை மண்டல மடத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

காஞ்சிபுரம், ஜன.11-

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டு அதனை மடத்தின் நிர்வாகிகளிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.


காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே தொண்டை மண்டல ஆதீன மடம் உள்ளது.இம்மடத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் 5862 சதுர அடி சென்னை புரசைவாக்கம் வேளாளர் தெருவில் இருந்து வந்தது. இதனை சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்துள்ளார். 

இந்த இடத்தினை மீட்குமாறு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி உத்தரவிட்டதன் பேரில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆ.முத்துரத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா மற்றும் வருவாய்த்துறை,காவல்துறையினர் அந்த இடத்தை மீட்டு பூட்டி சீல் வைத்தனர். 

பின்னர் தொண்டை மண்டல ஆதீனத்தின் நிர்வாகிகளிடமும் ஒப்படைத்திருப்பதாக அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படவிளக்கம்...ரூ.12 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டு தொண்டை மண்டல ஆதீன மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்த அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு தலைமையிலான அதிகாரிகள் குழு

No comments

Thank you for your comments