Breaking News

கடந்த 11 நாட்களில் 10 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருள் வைத்திருப்பவர்களின் மீது தகராரு செய்பவர்கள் மீதும் காவல் துறை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.









இந்நிலையில்,  இன்று (11.01.2023)  பொது இடங்களில் பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதை பொருள் வைத்திருந்த 5 நபர்களை காவல்துறை கைது செய்தனர்.

இதில் அசாரப்தீன் (21) அரவிந்த் குமார்  (எ) அரவிந்த் கிண்டி (39) அழகரசன் (எ) அழகு அம்பத்தூர் மணிகண்டன் (எ) மணி  (29) அம்பத்தூர் செல்வ பாலாஜி (22) அம்பத்தூர் இவர்களை சோழவரம் காவல் நிலையம் மற்றும் அம்பத்தூர் டி1 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இவர்கள் மீது மீண்டும் பொதுமக்கள் மத்தியில் தகராறு செய்யாத வண்ணம் இருக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் உத்திரன் பெயரில் கைது செய்தனர் 

இந்த வருடம் தொடங்கி 11 நாட்களில் 10 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர் என்று காவல்துறை தெரிவித்தனர்

No comments

Thank you for your comments