தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது - ரூ. 1,00,000/- வீதம் பண முடிப்பு
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 03.09.2021 அன்று, 2021-2022 நிதி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முன்மாதிரியான பங்களிப்பு அளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 தனி நபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருதும் தலா ரூ. 1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்கப்படும் என அறிவித்தார்.
கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் / பள்ளிகள் / கல்லுரிகள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனிநபர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு 2022 – 2023 ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி 2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு 4.பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் 5. நிலைத்தகு வளர்ச்சி 6. திடக்கழிவு மேலாண்மை 7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு 8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை 9.காற்று மாசு குறைத்தல் 10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை 11.சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு 12.கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை 13. இதர சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் ஆகியன.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்திலிருந்து (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், காஞ்சிபுரம் அவர்களை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments