இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஏழை குடிசை வாசிகளுக்கு தார்பாய்கள் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஏழை குடிசை வாசிகளுக்கு தார்பாய்கள் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பு சார்பில்விருத்தாசலம் தாலுக்கா கிளை கௌரவ செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமையில் ஏழை பொதுமக்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட கை, கால் இழந்து ஊனமுற்ற குழந்தைகளுக்கு தார்ப்பாய், வீட்டு உபயோக நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கு இரண்டு லட்சம் மதிப்பிலான 'நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் பானுமதி, ஸ்டாலின், மணிபாலன், அருண்குமார், சண்முகம், பிரேம்குமார், லட்சுமி, கார்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியரின் உதவியாளர் அரங்கநாதன் சிறப்புரை ஆற்றுகிறபோது தற்போது ஏழை எளிய குடிசைவாசிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான உத்தரவினை பெற்று தருவதாக கூறினார். மேலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அரசிடம் பெற்று தருவதாக உறுதியளித்தார் இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டடு பயனடைந்தனர்.


No comments
Thank you for your comments