பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற உறுதிச்சான்று தேவையில்லை
சென்னை, டிச.22-
பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற செய்ய உறுதிச்சான்று தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில், தேர்வு எழுதும் மாணவர்கள் பெயரை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. மாணவர் முந்தைய ஆண்டுகளில் தமிழ் வழியில் படித்தாரா? எந்த பள்ளியில் படித்தார் என்ற விவரங்களை ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து உறுதி சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும் என சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற செய்ய உறுதிச்சான்று தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments
Thank you for your comments