Breaking News

உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவை காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் துவக்கி வைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை விழா தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

இவ்விழாவிற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமை வகித்தும் கலைத் திருவிழாவை துவக்கி வைத்தார்.

துவக்க விழாவிற்கு உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கலைத் திருவிழாவில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இத்தொடக்க விழாவில் திமுக உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணைத் தலைவர் இளமதி கோவிந்தராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகன், மாவட்ட கவுன்சிலர் பத்மாபாபு, பேரூராட்சி மன்ற உறுப்பினர் குணசேகரன்,ஒன்றிய துணை செயலாளர்கள் சுகுணா,கெங்கன் ஒன்றிய அவைத்தலைவர் சுப்புராயன்,பேரூர் அவைத்தலைவர் T.ரமேஷ்,மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன்,பேரூர் மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments