அருள்மிகு மூலஸ்த்தம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிசேகம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு மூலஸ்த்தம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து மூலஸ்த்தம்மனின் பேரருளை பெற்றுச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மூலஸ்த்தம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி விக்னேஷ்வர பூஜை,மஹா கணபதி ஹோமம், விசேஷ திரவிய ஹோமத்துடன் முதற்கால யாக சாலை பூஜை நடைபெற்று, மூன்றாம் கால யாக சாலை பூஜை மற்றும் நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுற்று, யாக சாலைகளில் இருந்து கலச புறப்பாடாகி மேளத்தாளங்கள் முழங்க, பக்தர்களின் பக்தி பரவச கோஷங்களுடன் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது, ஹரித்துவார் புகழ் ஸ்ரீலஸ்ரீ சுரேஷ் சந்திர சுவாமி ஜி முன்னிலையில் மூலவர் விமானத்திலுள்ள கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.மேலும் கும்பாபிஷேகத்தை யொட்டி அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் மீது கும்பாபிஷேக நீரானது தெளிக்கப்பட்டது.மேலும் மூவருக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் முத்தியால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து மூலஸ்த்தம்மனின் பேரருளை பெற்றுச்சென்றனர். மேலும் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானங்களும், அருட்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.


No comments
Thank you for your comments