பொது இடத்தை தனி நபர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது- விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கையனூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் பொது இடத்தை தனி நபர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேப்பூர் தாலுகாவிற்க்கு உட்பட்ட இலங்கியனூர் ஊராட்சி பொது மக்கள் சார்பில் தங்கள் ஊரில் சர்வே எண் 170/ 2ல் உள்ள.இடத்தில் துரோபதை அம்மன் கோவில் அமைந்திருக்கிறது இந்தக் கோவிலில் வருடத்திற்கு 2 முறை 10 நாட்கள் திருவிழா நடைபெறும் திருவிழாவின் போது 3000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்,
இந்த கோவிலின் அருகில் துணை சுகாதார நிலையம், நூலக கட்டிடம், மினி டேங்க்,நெல் கொள்முதல் நிலையம் ஆகியவை உள்ளது, இந்த இடத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விலை பொருட்களை உலர வைக்கும் களம் அமைக்க 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வேலை நடைபெற்று வருகிறது இந்த இடம் அரசு கட்டிடங்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேப்பூர் வட்டாட்சியர் அவர்கள் தனிநபரின் கோரிக்கையை ஏற்று இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருவதை தடுத்துமனை வேண்டி விண்ணப்பத்தி விண்ணப்பித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு கிராம பொதுமக்கள் சார்பில் சார் ஆட்சியர் பழனியிடம் மனு அளிக்கப்பட்டது
இந்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து இலவசமான ஏற்பட்டாவை மாற்றிய இடம் தேர்வு செய்து கொடுக்கப்படும் என சார் ஆட்சியர் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.
மேலும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணாவிரதம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்த போவதாக பொதுமக்கள் சார்பில் கூறினர்.
இந்தமனு கொடுக்கும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments