Breaking News

மாண்டாஸ் புயலால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை நேரில் ஆய்வு

மாண்டாஸ் புயலால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளை திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை பார்வையிட்டார்.


புயல் மற்றும் கனமழை காரணமாக மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், மீனாட்சி நகர், திருப்பதி நகர், மீரா நகர் ஆகிய தாழ்வான பகுதிகளை திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடன் மாங்காடு நகர திமுக செயலாளரும்-நகர மன்ற துணை தலைவர் பட்டூர் எஸ் ஜபருல்லா, நகர மன்ற தலைவர் சுமதி முருகன்,நகராட்சி ஆணையர் சுமா, நகராட்சி பொறியாளர் நளினி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முருகன்,சாரதி, கணபதி, பெருமாள்ராஜ், பாஸ்கரன், விஜய்குமார்,         மற்றும் பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


No comments

Thank you for your comments