Breaking News

இந்திய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

விருத்தாசலம் அருகே இந்திய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மாங்குளம் கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்  தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சத்யராஜ் தலைமையில் நடைபெற்றது 


இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஜெயவேல் மண்டல துணை செயலாளர் ராஜவேல், நல்லூர் ஒன்றிய தலைவர் மணிவேல், விருத்தாசலம் நகரத் தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் பாபு, பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் நகரத் தலைவர் ராஜேந்திரன், கடலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் இருப்பு இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தகவல்  தொழில்நுட்ப அணி செயலாளர் டாக்டர் ஏ.பி.ஜி ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

இந்நிகழ்ச்சியில்  மங்களூர் ஒன்றிய தலைவர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் இளவரசன்,  தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் மணி, மணி,வண்ணன், தினேஷ்குமார், பூமிநாதன், ராம்குமார், மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், பார்க்கவே குல முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments