Breaking News

இ-நாம் திட்டத்தினால் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் காத்திருக்கும் அவலம் நிலை....

விருத்தாச்சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தினால், வியாபாரி மற்றும் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் காத்திருக்கும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளின் விளைப் பொருட்களை, வியாபாரிகள் கடந்த காலங்களில் மறைமுக ஏலம் முறையில் கொள்முதல் செய்து வந்தனர்.

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள், இ- நாம் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், செல்போன் அல்லது கணினி முறையில் விலைப்பட்டிலை அறிவிக்க வேண்டும் என அதிகாரிகள் வியாபாரிகளிடம் வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,  கடந்த வாரம் சார் ஆட்சியர் பழனி தலைமையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

நடைபெற்று முடிந்த பேச்சுவார்த்தையில்,  டிசம்பர் ஒன்றாம் தேதி முதல், இ- நாம் திட்டத்தின் மூலம்,  படிப்படியாக விலை போட வலியுறுத்தப்பட்டது.  அதன் அடிப்படையில் இன்று இ- நாம் திட்டத்தின் மூலம் விவசாய விலை பொருட்களுக்கு ஆன்லைன் மூலம் வியாபாரிகள் விலை போடுவார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில்,  விலை போடாமல் புறக்கணிப்பு செய்தனர். 

இதனை அடுத்து  கடலூர் மாவட்ட விற்பனை குழு அதிகாரிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், கடலூர் மாவட்ட விற்பனை குழு தனி அலுவலர் பூங்கோதை, கடலூர் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் விஜியா மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், உள்ளிட்ட செயல் அலுவலர்கள் தலைமையில்,  வியாபாரிகள் கடலூர் மாவட்ட மண்டல செயலாளர் சண்முகம், விருத்தாசலம் வர்த்தக சங்க தலைவர் கோபு, பொருளாளர் சேட்டு முகமது, ஒழுங்குமுறை விற்பனை கூட மாநில துணை செயலாளர் பழமலை உள்ளிட்டோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வியாபாரிகள் வெளிநடப்பு செய்தனர். 

இ - நாம் திட்டத்தில் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே, ஏற்பட்டுள்ள பிரச்சனையால், விவசாயிகள் தங்களது விலைப் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதில்  தமிழகத்தில் உள்ள அனைத்து ஒழுகுமுறை விற்பனை கூட வியாபாரிகள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments