உலக கோப்பையில் 9 கோல் - மரடோனா சாதனையை முறியடித்த மெஸ்சி
தோகா :
கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார். கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அவர் தொட்டார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.
9️⃣ Lionel Messi8️⃣ Diego MaradonaWatch all of Leo Messi's #FIFAWorldCup goals on a night where he overtook the great Diego Maradona 🇦🇷— FIFA World Cup (@FIFAWorldCup) December 3, 2022
No comments
Thank you for your comments