தொடர் கன மழை எதிரொலி 430 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் கன மழை எதிரொலி காரணமாக ஏரிகள் மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாண்டஸ் புயல் கரையை கடந்து இரு நாள் ஆகிவிட்ட நிலையிலும் ஆங்காங்கே மழை விட்டு விட்டு பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு தொடர் கன மழையானது பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்த தொடர் கன மழையின் எதிரொலியாக ஏரிகள் மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 430 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.308 ஏரிகள் 75%-99% , 130 ஏரிகள் 50%-75%, 41 ஏரிகள் 25%-50% நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த தொடர் கன மழையின் காரணமாக ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பத் துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளை 24 மணி நேரமும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)

No comments
Thank you for your comments