Breaking News

நெல்-II (சம்பா) பருவத்திற்கு பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு

நெல்-II (சம்பா) பருவத்திற்கு பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் (Enrolment of farmers), 15.09.2022 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. சேருவதற்கான இறுதி நாள் 21.11.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல  கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், 

நெல்-II (சம்பா) பருவத்திற்கு பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் (Enrolment of farmers), 15.09.2022 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. சேருவதற்கான இறுதி நாள் 21.11.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பருவத்திற்கு பயிர்க்காப்பீடு திட்டத்தில்,  நெல்-II (சம்பா) பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய விரும்பி, கூட்டுறவு சங்கங்களை நாடிவரும் கடன் பெற்றோர் மற்றும் கடன் பெறாதோர் என அனைத்து விவசாயிகளும், பயிர்க்காப்பீடு செய்வதற்கான இறுதி நாளுக்குள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனுறும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்பெறும் பொதுச்சேவை மையங்கள் ஆகியன, வங்கி விடுமுறை நாளான 20.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) திறந்து செயல்படவுள்ளது.

எனவே அனைத்து விவசாய பெருமக்களும் பயிர்க்காப்பீடு செய்வதற்கான இவ்வாய்ப்பினை பயன்படுத்தி முழுமையாக பயிர்க்காப்பீடு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments

Thank you for your comments